குற்றாலத்தில் தூய்மை பணிகள் தீவிரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு குற்றாலத்தில் தூய்மை பணிகள் தீவிரமாக நடந்தது

Update: 2022-12-06 18:45 GMT

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தென்காசி வருகிறார். அப்போது அவர் குற்றாலம் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். இதனை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உத்தரவின்படி நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் குற்றாலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சுற்றுலா மாளிகையின் சுற்றுப்புறங்களில் தூய்மை பணி நடைபெற்றது. புகை மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது. பிரதான சாலைகள் முழுவதும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலகரம் பேரூராட்சி பகுதி முழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு இனி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதே போன்று குற்றாலம் பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலைகளில் கடைகளில் வாசல் பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த ஆய்வின்போது பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் தெய்வீகன் (குற்றாலம்), மாணிக்கராஜ் (ஆய்க்குடி), அமானுல்லா (இலஞ்சி), பரமசிவன் (மேலகரம்), குமார் பாண்டியன் (புதூர்), குற்றாலம் சுகாதார அலுவலர் ராஜ கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்