கோவில் வளாகத்தில் தூய்மை பணி
கோவில் வளாகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் புது விராலிப்பட்டி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதனை பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பொன்னுத்துரை பார்வையிட்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி ஊக்கப்படுத்தினார். முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.