'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் தூய்மை பணி
காரியாபட்டி ஒன்றியத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
காரியாபட்டி,
காரியாபட்டி ஒன்றியத்தில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
தூய்மை பணி
காரியாபட்டி அருகே தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் 'நம்ம ஊரு சூப்பரு' என்ற சுகாதார சிறப்பு பிரசாரம் தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ் தூய்மை பணி அக்டோபர் 2-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் முதல் கட்டமாக பொது இடங்கள், அரசு அலுவலகங்கள், நீர்நிலைகள் ஆகிய இடங்களில் பெருமளவு சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மை பணி நடைபெற்றது.
காரியாபட்டி அருகே கம்பிக்குடி ஊராட்சி மந்திரி ஓடை கிராமத்தில் உள்ள அரசு கட்டிடங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பள்ளிகளிலும் சுத்தம் செய்யும் பணி நடந்தது.
சுற்றுலா தலங்கள்
அங்கன்வாடி, அரசு சுகாதார நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் இதர கட்டிடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது.
இந்த பணிகளை மாவட்ட ஊராட்சி செயலாளர் முருகன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் ஊராட்சி செயலர் முத்துராக்கு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.