சிவகிரி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணி

சிவகிரி பேரூராட்சி பகுதியில் தூய்மை பணி நடைபெற்றது.

Update: 2023-09-24 18:45 GMT

சிவகிரி:

சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் நெல்லை மண்டல பேராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், சிவகிரி பேரூராட்சி முக்கிய பகுதிகளில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இதையொட்டி நான்கு ரதவீதிகள், அரசு அலுவலகங்கள், முக்கிய பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்றது. மேற்படி பணிகளை சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு பார்வையிட்டார். சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்