முழுவீச்சில் நடந்த தூய்மை பணி

ஆரணி நகராட்சி பகுதியில் முழுவீச்சில் தூய்மைப்பணி நடந்தது.

Update: 2023-10-01 10:46 GMT

ஆரணி

ஆரணி நகராட்சி பகுதியில் முழுவீச்சில் தூய்மைப்பணி நடந்தது.

தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் தூய்மைப்பணி மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி ஆரணியில் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, துணைத் தலைவர் பாரி பி.பாபு ஆகியோர் தலைமையில் தூய்மைப்பணி நடந்தது.

ஆரணி புதிய பஸ் நிலையம் அருகாமையில் உள்ள குப்பைமேடு பகுதிகளை தூய்மை பணியாளர்கள் முழுவீச்சில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.

இதில் நகராட்சி ஆணையாளர் கே.பி.குமரன், பொறியாளர் உமா மகேஸ்வரி, சுகாதாரத் தனி அலுவலர் மோகனசுந்தரம், சுகாதார ஆய்வாளர் வடிவேல், கள மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்