தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரக்கோணத்தில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரக்கோணம் நகராட்சி சார்பில் தூய்மை நகரத்திற்கான 'என் குப்பை, என் பொறுப்பு' எனும் தூய்மை நிகழ்ச்சி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரக்கோணம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்ற விழிபுணர்வு நிகழ்ச்சியில் சுகாதர அலுவலர் மோகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது மனித கழிவுகளை மனிதர்களை கொண்டு அகற்றுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்பவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சுதாகர், தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.