தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு ஊர்வலம்
வேலூரில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் வேலூரில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை மேயர் சுனில்குமார், கமிஷனர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) சுஜாதா வரவேற்றார்.
ஊர்வலம் அண்ணாசாலை வழியாக சென்று கோட்டை காந்திசிலை அருகே முடிவடைந்தது. இதில் 150-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.