கூடலூரில் விழிப்புணர்வு தூய்மை பணி
கூடலூரில் விழிப்புணர்வு தூய்மை பணி நடைபெற்றது.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்தும், மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்பணர்வு தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்று நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை, நகராட்சி சுகாதார அலுவலர் விவேக் மற்றும் தூய்மை பணியாளர்களை அறிவுறுத்தினார்.
இதையடுத்து கூடலூர் நகராட்சியில் நேற்று ஆணையாளர் காஞ்சனா, சுகாதார அலுவலர் விவேக் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு தூய்மை பணி நடைபெற்றது. அப்போது கூடலூர் ஒட்டாண்குளம் கரைப்பகுதி, காமாட்சி அம்மன் கோவில் தெரு, காக்கைக்கு அன்னம் இடும் பகுதி உள்ளிட்ட இடங்களில் தூய்மை பணியாளர்கள், தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த பகுதிகளில் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்று நகரின் அனைத்து பகுதிகளிலும் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று சுகாதார அலுவலர் தெரிவித்தார்.