ஆதிரெத்தினேசுவரர் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி

திருவாடானையில் தேரோட்டத்தையொட்டி ஆதிரெத்தினேசுவரர் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

Update: 2022-06-02 17:18 GMT

தொண்டி, 

திருவாடானையில் தேரோட்டத்தையொட்டி ஆதிரெத்தினேசுவரர் கோவில் தேர் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.

கொடியேற்றம்

திருவாடானையில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சினேக வல்லி சமேத ஆதிரெத்தினேசுவரர் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் திருநாளையொட்டி வருகிற 11 -ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி தூசி படிந்த நிலையில் இருந்த சாமி அம்மன், தேரின் மேற்கூரைகள் மற்றும் பாதுகாப்பு தகரங்கள் அகற்றப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.

சுத்தம் செய்யும் பணி

இதனால் 2 தேர்களிலும் தூசி அதிக அளவு படிந்து இருந்தது. இதனையொட்டி தண்ணீரை பீய்ச்சி அடித்து 2 தேர்களையும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்