தூய்மை பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்செந்தூரில் தூய்மை பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் நகராட்சி சார்பில் பகத்சிங் பஸ் நிலையத்தில் நகர தூய்மைக்கான மக்கள் இயக்க தீவிர தூய்மை பணிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி தலைவர் சிவஆனந்தி தலைமையில் ஆணையாளர் வேலவன், துணை தலைவர் ஏ.பி.ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பின்னர் பஸ்நிலையம் பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளை நகராட்சி தலைவர் சிவஆனந்தி தொடங்கி வைத்தார். மேலும் பஸ்நிலைய சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் அகற்றினர். தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் மஞ்சள் துணி பை வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல் முருகன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.