தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி
கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கட்டிகானப்பள்ளி ஊராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காயத்திரிதேவி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி திட்ட அலுவலர் ஷகீலா கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்கள் 50 பேருக்கு வளையல்கள் மற்றும் பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதி, செல்லக்கண்ணு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வி பாஸ்கர், ஊராட்சி செயலாளர் மூர்த்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.