தூய்மைப்பணி விழிப்புணர்வு முகாம்
தூய்மைப்பணி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சியின் 3-வது வார்டுக்கு உட்பட்ட கணேஷ்நகரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் பேரூராட்சித்துறை சார்பில் தீவிர தூய்மைப் பணிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழிப்புணர்வு முகாமிற்கு பேரூராட்சி தலைவி கோகிலாராணி நாராயணன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் தூய்மைப்பணிக்காக இல்லம் தேடி வரும் பேரூராட்சி பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்கா குப்பை, பிரித்து அளிப்பது எப்படி என செயல் விளக்க பயற்சி அளிக்கப்பட்டது. வீட்டின் சுத்தம் பேணுதல், வீதியின் சுத்தம் பராமரித்தல், நீர்நிலைகளை பாதுகாத்தல், குறித்த விளக்கவுரையும் அளிக்கப்பட்டது. சுகாதாரம் குறித்து துப்புரவு ஆய்வாளர் அபுபக்கர் கருத்துரை வழங்கினார். பேரூராட்சி உறுப்பினர்கள் அபுபக்கர், நேரு, சீனிவாசன், சாந்திசோமசுந்தரம், துப்புரவு மேற்பார்வையாளர்கள் கவிதா, பாலச்சந்திரன் கலந்து கொண்டனர்.