துப்புரவு பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே துப்புரவு பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-02-26 17:47 GMT

ஜோலார்பேட்டை அருகே பாராண்டபள்ளி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 52), இவர் திருப்பத்தூர் நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு ராணி (45) என்ற மனைவியும் சந்தோஷ் (28) என்ற மகனும், சங்கீதா (25) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற சீனிவாசன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை ஜோலார்பேட்டை அருகே பெரிய மூக்கனூர் சிலிப்பி வட்டம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் யாராவது அடித்துக் கொன்றார்களா? அல்லது வேலை பளு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்