அடையாளம் தெரியாத வாகனம் மோதி துப்புரவு பணியாளர் சாவு
அடையாளம் தெரியாத வாகனம் மோதி துப்புரவு பணியாளர் சாவு
வல்லம்
தஞ்சையை அடுத்த ஆலக்குடியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44). துப்புரவு பணியாளர். ஆலக்குடி - வல்லம் சாலையில் உள்ள தண்ணீர் டேங்கில் மின் மோட்டார் மூலம் குடி தண்ணீர் ஏற்றப்பட்டு ஆலக்குடி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. சக்திவேல் தினமும் மின் மேட்டார் மூலம் நீரை ஏற்றும் வேலைபார்த்து வந்துள்ளார். நேற்று சக்திவேல் தனது சைக்கிளில் வேலைக்கு சென்றுவிட்டு, ஆலக்குடி-வல்லம் சாலையில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சக்திவேல் மனைவி அம்பிகா (40) கொடுத்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.