பஸ்சில் ஏற முயன்ற 8-ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து படுகாயம்

பஸ்சில் ஏற முயன்ற 8-ம் வகுப்பு மாணவன் தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தான்.

Update: 2022-12-07 19:39 GMT

வத்திராயிருப்பு, 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் நிர்மல் கிருஷ்ணன் (வயது13). வத்திராயிருப்பில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து ரெங்கப்பநாயக்கன்பட்டிக்கு வத்திராயிருப்பிலிருந்து- ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் அரசு பஸ்சில் ஏற முயன்ற போது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பின்பக்க டயரில் சிக்கி படுகாயம் அடைந்தான். அவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவன் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.

Tags:    

மேலும் செய்திகள்