சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அலுவலர் களுக்கான புத்தாக்க பயிற்சி வகுப்பு சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிவகங்கை சரக துணை பதிவாளர் வெங்கட்லெட்சுமி, காரைக்குடி துணை பதிவாளர் சரவணன், பொதுவினியோக திட்ட துணை பதிவாளர் குழந்தைவேலு, இளையான்குடி கூட்டுறவு நகர வங்கி துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பாரதி உள்பட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.