பரவையில் துக்க வீட்டில் கோஷ்டி மோதல்: வாலிபரை கத்தியால் குத்தி கொன்ற 3 பேர் கைது

பரவையில் துக்க வீட்டின் முன்பு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-30 21:00 GMT

வாடிப்பட்டி

பரவையில் துக்க வீட்டின் முன்பு ஏற்பட்ட கோஷ்டி மோதலில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் கொலை

மதுரை மாவட்டம் பரவை மந்தை பகுதியை சேர்ந்தவர் கோபால்(வயது 65). இவர் உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது வீட்டின் முன் பந்தல் அமைத்து உறவினர்கள் ஒன்று கூடி அமர்ந்திருந்தனர். அப்போது பரவை கம்பர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகன் வெங்கடேசன் (வயது 25) என்பவர் தனது நண்பர்களுடன் அந்த வழியாக சென்றார். அப்போது முன்பகை காரணமாக கோபாலின் பேரன் சங்கர்லாலுக்கும் வெங்கடேசனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

அது கைகலப்பானதில் இருதரப்பினரும் கோஷ்டியாக மோதிக் கொண்டனர். இதில் கத்தியால் குத்தி வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டார்.

3 பேர் கைது

இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். வெங்கடேசன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சங்கர்லால் (28), சக்தி சரவணன் (25), நடராஜன் (47) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்