கபடி விளையாட்டில் மோதல்; 5 பேர் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் கபடி விளையாட்டில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-01 20:54 GMT

நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த வாரம் கபடி விளையாட்டில் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது அஜீஸ் (வயது 24) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்துல் அஜீஸ் (26), முகமது கமாலுதீன் (21), பகத் அப்பாஸ் (26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்றொரு தரப்பில் பகத் அப்பாஸ் கொடுத்த புகாரின் பேரில், முகமது அஜீஸ், ரியாஸ் கான் (21) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்