தா.பழூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல்; 8 பேர் மீது வழக்கு

தா.பழூர் அருகே இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-18 18:30 GMT

காதல் திருமணம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முத்துகணேஷ். இவருடைய மனைவி கமலி (வயது 24). இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தன்று கமலியின் தம்பி ஈஸ்வர் சரக்கு ஆட்டோ ஓட்டி சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த முத்துகணேஷ் குடும்பத்தை சேர்ந்த காந்தி, அவருடைய மனைவி மாலதி, மகன் முரளி, மோகன்ராஜ் மனைவி காயத்ரி ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

8 பேர் மீது வழக்கு

அதுபோல் காயத்ரியின் தம்பி முரளிதரன் தனது தாயாரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தபோது கமலி, கமலியின் உறவினர்களான அரவிந்தன் மகன் ஈஸ்வர், ஆறுமுகம் மகன் அரவிந்தன் என்கிற ராஜேந்திரன், ராஜேந்திரன் மனைவி வெண்ணிலா ஆகியோர் வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கமலி மற்றும் காயத்ரி ஆகியோர் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்