பெண்ணின் வீடியோவை வெளியிடுவதாக கூறிபணம் கேட்டு மிரட்டிய 2 பேர் மீது வழக்கு
பெண்ணின் வீடியோவை வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் 48 வயது பெண் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னுடன் பழகிய 2 பேர் நான் நிர்வாணமாக இருந்ததை செல்போனில் பதிவு செய்தனர். அதனை வெளியிடுவதாக கூறி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சுல்தான், ஜாகீர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.