வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறிஜெகதளா பேரூராட்சி கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்

வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி, ஜெகதளா பேரூராட்சி கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-01 18:45 GMT

குன்னூர்

வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று கூறி, ஜெகதளா பேரூராட்சி கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெகதளா பேரூராட்சி

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியின் தலைவராக தி.மு.க.வை சேர்ந்த பங்கஜம் என்பவர் உள்ளார். இந்த நிலையில் பேரூராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்களுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்கு சரிவர நிதி ஒதுக்குவதில்லை என கூறி தி.மு.க. கவுன்சிலர்கள் பரிமளா மற்றும் திலீப் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. கவுன்சிலர் சஜீவனும் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கையில் பதாகையை ஏந்தியவாறு அவர்கள் கோஷமிட்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கூறுகையில், கடந்த மூன்று மாத காலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் இன்று (நேற்று) தர்ணாவில் ஈடுபடுகிறோம் என்றனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. உயர் அதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால் தான் இந்த இடத்தை விட்டு செல்வோம் என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து இரவு 8 மணி குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷ்ணகுமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் இப்ராகிம்ஷா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நீண்ட நேரமாக நடந்தது. மேலும் அசம்பாவித சம்பவம் ஏற்படுவதை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்