சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்கக்கோரி சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

Update: 2022-09-15 17:33 GMT

குளச்சல், 

குளச்சல் அருகே உள்ள இரும்பிலி, பனவிளை வழியாக இயங்கி வந்த தடம் எண் 5ஜி.வி., 9 ஜெ, 9 ஜி மற்றும் 88 டி ஆகிய அரசு பஸ்கள் கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது. இந்த பஸ்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி கடந்த மாதம் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) மாநில குழு உறுப்பினர் சுசீலா, மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்த இரும்பிலி சந்திப்பில் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்தநிலையில் ேநற்று வரை மேற்கூறிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மீண்டும் சாலை மறியல் நடத்த பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து பணிமனை கிளை மேலாளர் சுந்தர்சிங் சம்பவ இடத்துக்கு வந்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்துவிடம் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது 10 நாட்களுக்குள் பஸ்கள் உறுதியாக இயக்கப்படும் என கூறினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டுவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்