ஜல்லி ஏற்றி ெசன்ற 4 லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்

குலசேகரம் அருகே கேரளாவுக்கு ஜல்லி ஏற்றி சென்ற 4 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2022-09-19 21:48 GMT

குலசேகரம்:

குலசேகரம் அருகே கேரளாவுக்கு ஜல்லி ஏற்றி சென்ற 4 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இ்ந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கனிம வளங்கள் கடத்தல்

குமரி மாவட்டத்தில் இருந்தும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்தும் கேரளாவுக்கு கனிம வளங்கள் அதிக அளவில் கடத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. இதனால் உள்ளூரில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதுடன் நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது. மேலும் உள்ளூர் மினி லாரி ஓட்டுனர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காத நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலியில் இருந்து கேரளாவுக்கு ஜல்லி ஏற்றிய 4 லாரிகள் சென்று கொண்டிருந்தன. அந்த லாரிகள் குலசேகரம் அருகே மங்கலம் பகுதியில் சென்ற போது, அந்த பகுதியை சேர்ந்த மினி லாரி ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் லாரிகளை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர்.

ரூ.71 ஆயிரம் அபராதம்

அவர்கள் கனிமவளங்களை கேரளாவுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினீஸ் பாபு தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, லாரிகளை மீட்டு குலசேகரம் கொண்டு வந்தனர்.

அவற்றை ேசாதனையிட்ட போது அதிக எடை ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிக எடை ஏற்றியதாக ரூ.71 ஆயிரம் அபராதம் விதித்து விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்