நெல்லிக்குப்பத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியல்

சாலை பணிக்கு சரியான முறையில் அளவீடு செய்யாததை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-05-04 20:04 GMT

நெல்லிக்குப்பம்;

கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நெல்லிக்குப்பம் விநாயகர் கோவிலில் இருந்து கீழ்பட்டாம்பாக்கம் வரை நெடுஞ்சாலைத் துறையினர் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை சரியான முறையில் அகற்றாமல் சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபடுவதாக கூறி அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று 4 நில அளவையர்கள் நெல்லிக்குப்பத்துக்கு வந்து ஒரு வரை படத்தை வைத்து நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்த ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், வி.சி.க. மாவட்ட செயலாளர் முல்லை வேந்தன், அ.தி.மு.க. நகர செயலாளர் காசிநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், வி.சி.க. நகர செயலாளர் திருமாறன், த.வா.க. நகர செயலாளர் கார்த்திக், சமூக ஆர்வலர் குமரவேல், பா.ஜ.க. வேலாயுதம், தி.க இளங்கோ, கவுன்சிலர் புனிதவதி மற்றும் பொதுமக்கள் அப்பகுதிக்கு திரண்டு வந்தனர்.

அப்போது அவர்கள், ஒரு சிலருக்கு ஆதரவாக தவறாக அளவீடு செய்கிறீர்கள் என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நில அளவையர்களுக்கும், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதிகாரிகளுக்கும், பொதுமக்களும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது.

மேலும் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் நெல்லிக்குப்பம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், நெடுஞ்சாலைத்துறை மூலம் குறியீடு செய்த வரைப்படத்தை அதிகாரிகள் கொண்டு வர வேண்டும். இதை ஏற்க மறுத்தால் நாளை(சனிக்கிழமை) பொிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்