நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பொறுப்பேற்பு

வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2022-07-02 15:16 GMT

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலராக பணியாற்றி வந்த சுதா இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதால் புதிய செயல் அலுவலராக விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தை சேர்ந்த மோகன மாரியம்மாள் நியமிக்கப்பட்டார். அவர் செயல் அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணை தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மோகன மாரியம்மாள், நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்