நெய்வேலியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரதம்

நெய்வேலியில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-10-13 18:45 GMT

நெய்வேலி, 

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் கியூ பாலம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு தொழிற்சங்க தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் திருவரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வவலியுறுத்தி பேசினார்கள்.

என்.எல்.சி. நிர்வாகத்தை தனியார் மயம் ஆக்காமல் பொதுத்துறையாகவே பாதுகாக்க வேண்டும், வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இன்கோசர்வில் இருந்து நிரந்தர தொழிலாளிகள் எத்தனை ஆண்டுகள் வேலை செய்திருந்தாலும் பணிக்கொடை வழங்க வேண்டும், 2022-23-ம் ஆண்டு கணக்கின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டியவர்களுக்கு உடனடியாக பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டு் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோாிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் என்.எல்.சி. சி.ஐ.டி.யு. நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்