சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை முன்பு சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
ஆரல்வாய்மொழி,
தமிழக அரசு கூட்டுறவு நூற்பாலையில் ஓப்பந்தக்காரர்கள் மூலம் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் முறையை கைவிட வேண்டும், நீதிமன்ற உத்தரவுப்படி ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் 2-ம் மற்றும் 3-ம் பட்டியல் தினக்கூலி தொழிலாளர்களை காலதாமதமின்றி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் ஆரல்வாய்மொழியில் உள்ள கூட்டுறவு நூற்பாலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
இதற்கு நூற்பாலை சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் வடிவேல்குமார் தலைமை தாங்கினார். சுந்தர்லிங்கம், வேல்முருகன், மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் கிருஷ்ணபிள்ளை, கவுரவ தலைவர் சந்திரபோஸ், பொருளாளர் சரஸ்வதி, பஞ்சாலை மாநில பொருளாளர் சக்திவேல் ஆகியோர் பேசினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கண்ணன், மிக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் தங்க மோகனன் நிறைவுரை ஆற்றினார்.
-