சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பீர்முகமதுஷா, மாநில பொதுச்செயலாளர் சரவண பெருமாள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
கட்டுமானம் மற்றும் முறை சாரா தொழிலாளர்களை ஆய்வு என்ற பெயரில் அலைக்கழிப்பதை நிறுத்த வேண்டும். ஓய்வூதியத்தை முடக்க கூடாது. நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த ஆட்சியில் வழங்கியது போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும். புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் நடராஜன், ஜான்பாஸ்கர், சுரேஷ், பாலசுப்பிரமணியம், நாராயணன், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.