சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பாண்டியன், தவக்குமார், ராம்குமார், பிச்சைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காஞ்சீபுரத்தில் தமிழக மற்றும் வடமாநில தொழிலாளர்களை பிரித்து பேசும் அதிகாரியை கண்டித்து கோஷமிட்டனர்.