சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-25 18:40 GMT

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. இந்திய தொழிற்சங்கத்தின் சார்பில் கட்டுமானம், ஆட்டோ, லோடுமேன், முறைசாரா, கைத்தறி, தையல், சாலைபோக்குவரத்து உள்ளிட்ட தொழிலாளர்களின் நல வாரிய பணப்பலன்களை இரட்டிப்பாக்க வேண்டும்.

பெண்களுக்கு ஓய்வூதிய வயதை 55 ஆக்க வேண்டும், ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ மாவட்ட பொருளாளர் முத்துவிஜயன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் சந்தானம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் சிவாஜி சிறப்புரையாற்றினார்.

இதில் நிர்வாகிகள் சுடலைக்காசி, வாசுதேவன், மணி கண்ணு, ஞானசேகர், குருவேல், ஆனந்த், ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்