2-வது நாளாக போராட்டம் நடத்த திரண்ட சி.ஐ.டி.யு. நிர்வாகிகள்

Update: 2022-07-12 18:02 GMT

குளச்சல், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குளச்சல் பணிமனையில் சி.ஐ.டி.யு.க்கு ஒதுக்கப்பட்டிருந்த 576 எம்.சர்வீஸ் ஓட்டுனர் பணியிடத்தை மீண்டும் வழங்க வலியுறுத்தி 2-வது நாளாக குளச்சல் பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. சார்பில் போராட்டம் நடத்த மாவட்ட தலைவர் சங்கர நாராயணன், சம்மேளன நிர்வாகி ஸ்டீபன் ஜெயக்குமார் உள்பட பலர் திரண்டனர்.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தொழிலாளர்கள் மற்றும் கிளை மேலாளரிடம் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வருகிற 19-ந் தேதி நாகர்கோவில் துணை மேலாளர் (வணிகம்) அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக கூறி கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்