அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ ஆர்ப்பாட்டம்

ஆரணி, போளூரில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-10 17:06 GMT

போளூர்

ஆரணியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்க துணை பொதுச் செயலாளர் என்.மணி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடிவெடுக்க வேண்டும், போக்குவரத்து கழகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுத்து பணியாளர்களை நியமிக்க வேண்டும்,

ஓய்வூதியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும், போக்குவரத்து கழகங்களின் வரவிற்கும், செலவிற்கும் ஏற்படும் பற்றாக்குறை தொகையை அரசே ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட நிர்வாகி சி.அப்பாசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் போளூர் போக்குவரத்து பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல பொருளாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ.வினர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்