விழுப்புரத்தில் போலீசாரை கண்டித்துபொதுமக்கள் திடீர் சாலை மறியல்

விழுப்புரத்தில் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Update: 2023-05-08 18:45 GMT


விழுப்புரம் ரெயில் நிலையம் அருகில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக நகர போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கஞ்சா விற்பனை செய்வதாக சந்தேகப்பட்ட 28 வயதுடைய வாலிபர் ஒருவரை அழைத்துள்ளனர். அதற்கு அந்த வாலிபர், செல்ல மறுத்து போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து, அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதையறிந்த அந்த வாலிபரின் உறவினர்கள் விழுப்புரம் காந்தி சிலை அருகில் நேற்று இரவு 7.40 மணிக்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ராமச்சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர்கள் 7.50 மணிக்கு மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இச்சம்பவத்தால் விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்