பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கொளத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-22 17:04 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசையன்று மாடு விடும் திருவிழா பஸ் போக்குவரத்து செல்லும் படவேடு ரோட்டில் நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு மேலாண்டை பிள்ளையார் கோயில் தெருவில் மாடு விடும் திருவிழா நடத்த போலீசார் ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியதால் மண் கொட்டி சமன் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கீழண்டை தெரு மக்கள், எங்கள் தெருவில் மாடு விடும் திருவிழா நடத்தக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்த கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக படவேடு-கண்ணமங்கலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்