பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

களம்பூர் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Update: 2022-07-04 12:54 GMT

ஆரணி

களம்பூர் அருகே கூடலூர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேணுகோபால், களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் ஆகியோர் விரைந்த வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் கூறுகையில் இவர்கள் வசிக்கும் பகுதி கூடலூர், மடவிளாகம் ஆகிய 2 ஊராட்சியின் நடு மையத்தில் அமைந்துள்ள பகுதியாகும். இவர்கள் அனைவருமே கூடலூர் ஊராட்சியில் வரி செலுத்துவதில்லை.

அதனால் நான் ஏன், உங்கள் பகுதியில் உள்ள 13 வீட்டிற்கு குடிதண்ணீர் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றார்.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் எங்களுக்கு நீங்கள் தான் வேலை தர வேண்டும் என கோஷமிட்டனர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் வேணுகோபால், இரு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருவதாகவும் எங்களுக்கு ஒரே ஊராட்சியில் வசிப்பதற்கான உரிமம் வழங்கி 100 நாள் வேலை திட்டத்தில் அடையாள அட்டை வழங்க வேண்டும்,

முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுங்கள் கலெக்டரிடம் அனுப்பி நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்.

இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்