தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்

Update: 2023-06-24 19:46 GMT

பூதலூர் பகுதியில் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

பூதலூர் பகுதியில் தொடர்ந்து 4 நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமப்பட்டனர். இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பூதலூர் -செங்கிப்பட்டி சாலையில் வீரமசன்பேட்டை மின்வாரிய அலுவலக பிரிவு சாலையில் அந்தபகுதியை சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்ததும் பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்- இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், வீரமரசன்பேட்டை தமிழ்நாடு மின்சார வாரிய உதவி மின் பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனி வரும் காலங்களில் மின்சார வினியோகத்தில் தடைஇருக்காது என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த போராட்டம் காரணமாக பூதலூர் -செங்கிப்பட்டி சாலையில் போக்குவரத்து ½ மணிநேரம் பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்