நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-30 19:16 GMT

திருச்சி மாநகராட்சி 47- வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது சுப்பிரமணியபுரம் பகுதிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாய்களை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் உடைத்து விட்டனர். இதனால் கடந்த சில நாட்களுக்கு மேலாக அப்பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் குடிநீர் குழாயை சரி செய்ய கூறி நேற்று அப்பகுதி மக்கள் மற்றும் வார்டு கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் திருச்சி -புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கே.கே. நகர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதாக உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்