வானில் புகையை கக்கியபடி வட்டமிட்டு சென்ற ஜெட் விமானத்தில் இருந்து பயங்கர வெடி சத்தம்
வானில் புகையை கக்கியபடி வட்டமிட்டு சென்ற ஜெட் விமானம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நேற்று காலை சுமார் 10.15 மணியளவில் வானத்தில் ஜெட் விமானம் ஒன்று புகையை கக்கியபடி வட்டமிட்டது. சில நிமிடங்களில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இதனால் வானத்தில் வெண் புகை சூழ்ந்து கொண்டது. இந்த சத்தம் ஈரோடு மாவட்டம் சிவகிரி மற்றும் அதன் சுற்று பகுதிகளான அஞ்சூர், கந்தசாமிபாளையம், விளக்கேத்தி, மோளவிநாயகன்புதூர், நல்லசெல்லிபாளையம் மற்றும் பகுதியிலும் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீடுகளின் மேற்கூரைகளில் அதிர்வு ஏற்பட்டது.
இதன்காரணமாக பொதுமக்கள் பீதியடைந்தனர். நில அதிர்வு ஏற்பட்டுவிட்டதோ என பயந்து வீட்டு்க்குள் இருந்து அலறியடித்துக்கொண்டு் வெளியே ஓடிவந்தனர். அப்போது வானத்தில் வெண் புகை சூழ்ந்திருந்தது. இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு் சென்றனர்.
---