பாலதொழுவு குளத்தில் சிப்காட் கழிவு கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயற்குழு கூட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் குடிமங்கலத்தில் மாவட்ட தலைவர் மங்கலம் ரவி தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் புஞ்சை பாலதொழுவு பகுதியில் உள்ள குளம் குடிநீருக்காக விவசாயத்திற்காகவும் சுமார் 35 ஆண்டுகளாக உபயோகப்படுத்தப்பட்டது. தற்போது பாலதொழுவு குளம் முழுவதும் பெருந்துறை சிப்காட் கழிவுநீர் முற்றிலுமாக மாசுபடுத்திவிட்டது. இந்த பாலதொழுவு குளமானது அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் மிகப்பெரிய குளம் ஆகும். தற்போது அவினாசி அத்திக்கடவு திட்டம் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் விரைவில் பெருந்துறை சிப்காட் கழிவுநீரை தடுத்து நிறுத்தினால் மட்டுமே நல்ல நீரை குளத்தில் சேமிக்க முடியும். நிலத்தடி நீர் முற்றிலும் மாசுபடாமல் தடுக்க வழிவகை செய்ய வேண்டும்.
எனவே அதை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மடத்துக்குளம் தாண்டேஸ்வரன் மற்றும் வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேக குழுவினர் பொதுமக்களிடம் முறைகேடாக அறநிலைத்துறைக்கு தெரியாமல் நிதி வசூல் செய்து வருகின்றனர். இதுகுறித்து தாசில்தார் மற்றும் ஆர்.டி.ஓ.விடம் மனுபாலதொழுவு குளத்தில் சிப்காட் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு திட்டம்
தாராபுரம் நகர் 7-வது வார்டு பழைய ஆற்றுப்பாலத்தில் இருந்து தில்லாபுரி அம்மன் கோவில் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் பாலம் இடிந்து விழுந்துள்ளதால் அப்பகுதி வழியாக அறுவடை மற்றும் விதைப்பு காலங்களில் உரங்கள் கொண்டு செல்ல விவசாயிகள் சிரமப்படுகின்றனர். எனவே உடைந்த பாலத்தை அப்புறப்படுத்த வேண்டும். குடிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. எனவே காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காங்கயம் -தாராபுரம் சாலை அகலப்படுத்தும் பணி தாமதமாக உள்ளது. இதனால் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அகலப்படுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்.காங்கயம் நகரப் பகுதி பொதுமக்களுக்கு காலதாமதம் இன்றி சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதீஸ்வரி கந்தசாமி, மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், வெள்ளகோவில் ஜெகன், மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியம் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய தலைவர் குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.