சிலம்பாட்ட போட்டி

பாளையங்கோட்டையில் சிலம்பாட்ட போட்டி நடந்தது.

Update: 2022-10-10 18:46 GMT

நெல்லை மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் பாளையங்கோட்டை வ.உ.சி. உள் விளையாட்டு அரங்கில் 42-வது மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. இதன் தொடக்க விழாவுக்கு நெல்லை மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் உலகுராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சிலம்பு சுந்தர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சிலம்பு மாரிமுத்து வரவேற்றார்.

இதில் 11 வயது முதல் 13 வயது வரையிலான சப்-ஜூனியர் போட்டிகளும், 14 வயது முதல் 17 வயது வரையிலான ஜூனியர் போட்டிகளும் நடைபெற்றது. இதில் மொத்தம் 400 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் சிறப்பாக விளையாடிய 108 பேர் மாநில போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மயில் பாலசுப்பிரமணியன், கிங்ஸ்டன் ஜேம்ஸ் பால், சரவணன், மேத்யூ, சரவணசங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். முடிவில் செயல் தலைவர் செந்தில்ஆறுமுகம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்