சென்னிமலையில் அஜித் படம் ஓடும் தியேட்டரில் விஜய்க்கும் பேனர்; "நீயும் நானும் வேற இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுருடா" என வாசகம்
சென்னிமலையில் அஜித் படம் ஓடும் தியேட்டரில் விஜய்க்கும் பேனர் வைத்துள்ள ரசிகர்கள் அதில், ‘நீயும் நானும் வேற இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுருடா’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
சென்னிமலை
சென்னிமலையில் அஜித் படம் ஓடும் தியேட்டரில் விஜய்க்கும் பேனர் வைத்துள்ள ரசிகர்கள் அதில், 'நீயும் நானும் வேற இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுருடா' என்று குறிப்பிட்டுள்ளனர்.
வாரிசு-துணிவு
விஜய் நடித்த வாரிசும், அஜித் நடித்துள்ள துணிவும் இன்று திரைக்கு வந்துள்ளன. பல ஊர்களில் இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு பேனர்கள் வைத்துள்ளர்கள். பல ஊர்களில் ஒரே வளாகத்தில் உள்ள 2 தியேட்டர்களில் இருவரும் நடித்த துணிவும், வாரிசும் திரையிடப்படுகிறது. அப்படி உள்ள இடத்தில் தியேட்டர் முன்பு கட்-அவுட் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் 2 ரசிகர்கள் மத்தியிலும் ஒருவித பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே பேனர்
இந்தநிலையில் சென்னிமலையில் உள்ள ஒரு தியேட்டரில் அஜித் நடித்த துணிவு படம் திரையிடப்பட்டுள்ளது. அங்கு பேனர் வைத்துள்ள ரசிகர்கள் விஜய்க்கும் சேர்த்து ஒரே பேனராக வைத்து அசத்தியுள்ளார்கள்.
மேலும் அந்த பேனரில் 'நீயும் நானும் வேற இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுருடா' என்ற வாசகமும் உள்ளது. இதுபற்றி ரசிகர்கள் கூறும்போது சென்னிமலையில் ஒரே தியேட்டர்தான் உள்ளது. அதில் நடிகர் அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதனால் தமிழர் திருநாளன்று விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாது என்று அவருக்கும் சேர்த்து பேனர் வைத்துள்ளோம் என்றார்கள்.