பாபநாசம் புனித அந்தோணியார் தேர் திருவிழா
பாபநாசம் புனித அந்தோணியார் தேர் திருவிழா தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் புனித அந்தோணியார் தேர் திருவிழா வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதுசமயம் புனிதரின் திருக்கொடி வீதியுலா மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. பாபநாசம் புனித செபஸ்தியார் திருதலத்தின் பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் கொடியேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார். வருகிற 14-ந் தேதி புனிதரின் மின் அலங்கார தேர்பவனி நடைபெறுகிறது. கொடியேற்று விழாவில் திரிபுரா மாநில பங்குத்தந்தை ஜெயசீலன், பாபநாசம் புனித செபஸ்தியார் ஆலயத்தின் இணை பங்குத்தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் மற்றும் பாபநாசம் புனித அந்தோணியார் ஆலயத்தின் பங்குமக்களும், கிராமமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.