புனல்வாசல் புனித சவேரியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் புனித சவேரியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2022-11-24 18:45 GMT

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் புனித சவேரியார் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

புனித சவேரியார் ஆலயம்

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தஞ்சாவூர் மங்களபுரம் புனித லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை மரிய சூசை கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். இன்று மாலை தொடங்கும் திருவிழா, வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் மாலை 6.15 மணிக்கு செபமாலை, சவேரியார் நவநாள் ஜெபம், திருப்பலி, மறையுரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தேர் பவனி

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி வரும் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை கூட்டு பாடல் திருவிழா திருப்பலியும், அன்று இரவு 10 மணிக்கு தேர் பவனியும் நடைபெற உள்ளது. 3-ந்தேதி திருப்பலியை தொடர்ந்து, மாலை 4 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையும் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளருமான ஜான்சன் எட்வர்ட், உதவி பங்குத்தந்தை அற்புத சந்தியாகு, அருட் சகோதரிகள் மற்றும் புனல் வாசல் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்