புனித லூர்து மாதா ஆலய தேர்பவனி

திருத்துறைப்பூண்டி புனித லூர்து மாதா ஆலய தேர்பவனி நடந்தது.

Update: 2022-08-16 16:57 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை ஆலய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி கும்பகோணம் ஆயர் அந்தோணிசாமியால் கொடி புனிதம் செய்யப்பட்டு ஏற்றப்பட்டது. பின்னர் ஆயரால் சிறப்பு நூற்றாண்டு திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டு தேர்பவனி நடந்தது. தேர் திருத்துறைப்பூண்டி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றது. 2-வது நாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு நற்கருணைபவனி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. ஆலயத்தில்பணியாற்றிய முன்னாள் பங்கு தந்தையர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு புனித லூர்து அன்னைக்கு மணிமகுடம் சூட்டப்பட்டது. லூர்து அன்னையின் சிறிய மகுடம் சூட்டிய தேர் பவனி ஆலயத்தைச் சுற்றி பவனியாக கொண்டுவரப்பட்டது. முடிவில் நூற்றாண்டு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்