புனித வெள்ளியையொட்டிகோடி அற்புதர் அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி கோடி அற்புதர் அந்தோணியார் ஆலயத்தில் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையொட்டி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊர்வலத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேஸ், ஊர் தலைவர் ரமேஷ், ஆண்டனி, வேதியர் சகாயராஜ், பூர்ணநாதன், ஜோலூயிஸ், பவுல் ராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது இயேசுவின் பாடுகள் சிலுவை பாதை நாடக வடிவில் கிறிஸ்தவர்களால் நடித்து காட்டப்பட்டது.