சூலபாணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சூலபாணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த வீரா ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள சூலபாணி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி யாக பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணி அளவில் கோவில் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, வேலூர் ஒன்றியக் குழு தலைவர் அமுதா ஞானசேகரன், துணைத் தலைவர் மகேஸ்வரி காசி, மாவட்ட கவுன்சிலர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவிசுரேஷ், விஜயகுமாரி கண்ணன், கவிதா சிவகுமார், மாலதிசுரேஷ்பாபு, அண்ணாமலை, ஒன்றிய கவுன்சிலர் அம்மு மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.