கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை மும்முரம்

கோவில்பட்டியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2022-12-11 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி மெயின் ரோடு, தெற்கு பஜார், எட்டயபுரம் ரோடு, பகுதியில் உள்ள கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார், சொரூபம், குடில், மரங்கள், சீரியல் விளக்கு போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள.

இதுபற்றி கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை செய்யும் வியாபாரி மதன்ராஜ் கூறுகையில், "கிறிஸ்துமஸ் ஸ்டார், சொரூபம், குடில், மரம், பைன்மரம், சீரியல் லைட்டுகள் பெங்களூர், கொல்லம் பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்த பொருட்களுக்கு 15 முதல் 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.

கிறிஸ்துமஸ் ஸடார் சிறிய அளவு ரூ.10 முதல் ரூ.650 வரையும், சொரூபம் ரூ.350 முதல் 450 வரையும், குடில்கள் ரூ.450 முதல் 2,250 வரையும், மரம் ரூ.50 முதல் 2,800 வரையும், பைன் மரம் ரூ.1,200 முதல் 4,500 வரையும், சீரியல் விளக்குகள் ரூ.70 முதல் ரூ.900 வரையும் விற்பனை செய்கிறோம். கிறிஸ்தவ மக்கள் மற்றும் அல்லாது அனைத்து மக்களும் வாங்கி செல்கிறார்கள்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்