கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
ஆழ்வார்குறிச்சியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பேடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிவசைலத்தில் உள்ள அவ்வை ஆசிரமத்தில் குழந்தைகளோடு இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். பள்ளி முதல்வர் சரவணன் வரவேற்றார். ஆசிரம செயலாளர் ஸ்ரீரங்கம் வாழ்த்துரை வழங்கினார். குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் நாகூர் மீராள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.