குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி

குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர்.

Update: 2023-04-02 18:24 GMT

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் இருந்து பங்குத்தந்தை தங்கசாமி, உதவி பங்குத்தந்தை ஞானஅருள்தாஸ் தலைமையில் குறுத்தோலையுடன் ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்கல் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தனர். சிறுவர், சிறுமிகள் உள்பட அனைத்து பெரியோர்களும் சேர்ந்து குறுத்தோலையை கையில் ஏந்தி பவனி வந்தனர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை மற்றும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்