பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் வாலிபர் ஞாயிறு கொண்டாடப்பட்டது. காலை 8.30 மணிக்கு பாவூர்சத்திரம் மெயின் ரோட்டில் வாலிப ஆண்கள், பெண்கள் பவனி சென்றனர். பின்பு காலை 9.15 மணிக்கு வாலிப ஞாயிறு ஆராதனை ஆலயத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம் கிறிஸ்தவ ஆலய வாலிப ஆண்கள், பெண்கள் பங்கு பெற்று சிறப்பு ஆராதனை நடத்தினர். இறைசெய்தியை ராபின்சன் வழங்கினார். ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் சேகர குருவானவர் டேனியல் தனசன், சபை ஊழியர் தினகர் சந்தோஷசிங் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.